ஒற்றை வினாடிக்காக

வாகனங்கள் அவசரமாய்
விரைந்து செல்லும்...
காற்றில் இருள்
மெதுவாக பரவும்.

தெரு விளக்கு கம்பம்களில்
ஒளிப்"பூ" மெல்ல பூக்கும்...
மெல்லிய குளிர் காற்று
என்னை தீண்டி போகும்...

அவசரமாய் உலகம் என்னை சுற்றி
இயங்கி கொண்டு இருக்கும்...

நான் மட்டும்...
பேருந்து நிலைய சுவரில் சாய்ந்து
ஒற்றை காலில் தவம் இருப்பேன்
தேவதை அவள் கடந்து போகும்
ஒற்றை வினாடிக்காக!

No comments:

Post a Comment