வியர்த்து போனது என் விழிகள்

முன்னொரு நாள்...

அந்தி பொழுதில்
அவளும் நானும்
தனியே வலம் வருகையில்
அவள் ஒற்றை கை விரல்கள்
என் விரல்களை
இறுக்கி அணைத்தபோது

விறைத்து போனது
என் ஆண்மையாக இருந்தாலும்

வியர்த்து போனது என் இதயம்....


பின்னொரு நாள்...

அவள் தந்தைக்கு
துரோகம் இழைக்க மனமில்லை என்றும்
கடவுள் வழி நடப்போம் என்றும்
எங்கள் காதலை தியாகம் செய்யலாம்
என்ற போது....

மழலை போன்றவள் ...
போன்றவள் என்றெண்ணி
என் உணர்வுகளை கொன்று
வலியோடு வழியனுப்பினேன்...!

இன்று என் கண்ணெதிரிலே
இன்னொருவனோடு
கைகோர்த்து போகையில்

விறைத்து போனது
அவள் இதயமாக இருந்தாலும் ...

வியர்த்து போனது என் விழிகள்...!


No comments:

Post a Comment