கொள்ளை கோபம் வரும்

என்மீது உங்களுக்கு
எப்போதும் கோபமே வராதா..?
என்று
ஒரு நாள் திடீரென்று கேட்டாய்..
நான் புன்னைகைத்தபடியே
சொன்னேன்"வரும்

கொள்ளை கோபம் வரும்...

ஒருவேளை
நீ என் அன்பெல்லாம்
மறந்து விலகி போனால்...வரலாம்..?!

ஆனால் அப்போதும்
உன்மீதான கோபத்தை..
என்மேல்தான் காட்டிக்கொள்வேனேதவிர..
என் உயிர்மழை
உன்மீது அல்ல...'
என்றதும்
கண்ணீரோடு சாய்ந்துகொண்டாய்
உனக்கான என் தோள்களில்...

No comments:

Post a Comment