ஏக்கம்

விழிகளில் வழிந்தோடும் ஏக்கம்
புரண்டு படுத்தும்
வந்துத் தொலைக்காது தூக்கம்...

தடையிட்டு அடைத்தாலும்
அனையுடைத்துப் போகும்
எண்ணம் எல்லைத் தாண்டும் தருனம்.

கட்டுப் படுத்தி வைத்திருந்தும்
கட்டவிழ்த்துப் போகும்
கட்டழகில் தோற்றுவிட்ட சலனம்...

திறந்துவிட்ட மடையென
ஆசை உள்ளே ஓடும்
மறந்துவிட நினைத்தாலும்
தினம் விட்டு விட்டு மூடும்...

காமம் என்ற சுருதி நயமும்
காதலென்ற ராகம் சேரும்
காமம் இங்கு கரைந்து குலைந்து
காதல் என்று உருவம் மாறும்....!

No comments:

Post a Comment