ஒருதலை காதல்


ஒருதலை காதல்...

காவியங்களின் மறு பெயர்
காமத்தின் முகத்திரை
கற்பனை உலகத்தின் திறவுகோல்
கவிஞனின் முதல் வரிகள்...!

ஒருதலை காதலன்

உருவமில்லாத ஓவியம் வரைந்து
உருவம் பற்றி வரையறுப்பான் ...

கண்களை திறந்து கொண்டே
கனவுகளுக்காக காத்திருப்பன்...

அவளை அறிந்தவர்கள் முன்
உத்தமனாக உருமாறுவான்...

ஒருவரி திருக்குறள் படித்து
ஓராயிரம் பொருள் சொல்வான்...

வசை சொற்களை கூட
வாழ்துக்களாக்கி வாசிப்பான்...

உயிரின் உருவத்தை
உலகிற்கே சொல்வான்...

பொய்யான கற்களை கொண்டு
உண்மைக்கு கோயில் கட்டி
கற்பனையை கடவுளாக்கி
மணல் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பான் ...!

No comments:

Post a Comment