காதல் என்னைச் சுற்றி



உன்னை நினைத்து
உறங்கிவிட்ட இரவுகளில்

கவிதைகளெதுவும்
கைவரவில்லை...

மைதோய்ந்த காகிதங்களும்,
கொஞ்சம் மையும்
மட்டும் கோலமிட்டிருந்தது,
உன் காதலை

என்னைச் சுற்றி....

-அன்புடன்,
ஸ்ரீமதி.

No comments:

Post a Comment