நீயில்லாத என் மனசு

உலர்ந்து போகட்டும்

நிலா..


உதிர்ந்து போகட்டும்

நட்சத்திரங்கள்..


குயில் ராகமிழக்கட்டும்..


முற்றத்து ரோஜா
பூக்காமல் சாகட்டும்..


திட்டித் தீர்க்கும்


இப்படித்தான்
நீயில்லாத என் மனசு!


-முகமத் நியாஸ்

No comments:

Post a Comment