மாலை பொழுதில்

*



ஒரு மங்கிய மாலை
பொழுதில்ஆற்று மணலில்
நீ தந்த அச்சிட்ட
பிறந்த நாள் வாழ்த்தும்..
அதன் பின்னொருநாள் நீ
படிக்கத்தந்த தபூசங்கரின்

'முத்தத்தை கேட்டால்
என்ன தருவாய்' புத்தகமும்
அத்துடன் இணைப்பாய் தந்த,
நான் புகைபிடிப்பதை
உனக்கு காட்டிக்கொடுத்த
முத்தமும்...
இன்னும் இருக்கிறது
என்னிடம்.


-மகேந்திரன்.பெ

No comments:

Post a Comment