காதலோடு இறப்பேன்

தோல்வியைக் கண்டு அஞ்சியே
தோற்றுப்போனேன்
மனமிருந்தும் சொல்லாமல்
குரலிருந்தும் ஊமையாய் -
உண்மையில் நான் தான் ஊனமுற்றவன்!!

நீ வரும் பாதையில்
உதிர்ந்த பூக்கள் கூட மீண்டும்
உயிர் பெற்று செடியில்
ஒட்டிக் கொள்கிறது -என்
உடைந்த மனத்துண்டுகளை
இன்னும் தேடி முடிக்கவில்லை..

படைக்கும் பொழுது உயிரை
மனதில் வைத்துவிட்டான் பிரம்மன்
அவள் உடைத்து சென்றபின் பிணமாக திரிகிறேன்..

நீ இல்லாத இரவுகள் கூட சுகமாகத்தான் இருக்கிறது
நம் பேசாத நாட்களின் நினைவுகளோடு
இறந்தாலும் நம் காதலோடு இறப்பேன்
மீண்டும் அதற்காகவே பிறப்பேன்...

No comments:

Post a Comment