எனது கவிதைகளின்

எனது கவிதைகளின்
கண்ணீர்த்துளிகளில்
உருண்டுகொண்டேயிருக்கின்றன
உன்னோடான என் நினைவுகள்..

தீயின் நிழலில்
எரிந்து சாம்பலாகும்
என் தனிமையின் ரணங்கள்
கர்ண கொடூரமானவை.

காரணமற்ற பிரிவு
காதலுக்கு மட்டும்
எப்படித்தான் வந்து தொலைக்கிறதோ..?


-ஷிப்லி

No comments:

Post a Comment